சிமென்ட் கலவை லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு

 

பூந்தமல்லி, செப்.10: பூந்தமல்லியில் கலவை ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பூந்தமல்லி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமான பணிகளுக்கு கலவைகள் கலந்து லாரிகளில் எடுத்துச் செல்லும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான கலவைகள் ஏற்றிச் செல்லும் லாரி ஒன்று பணிகள் முடிந்து நேற்று முன்தினம் அதன் நிறுவன வளாகத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இரவில் திடீரென கலவை ஏற்றி வந்த லாரியின் முன் பகுதி தீப்பிடித்து எரிந்தது. இதைக் கண்டு அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து லாரியில் பிடித்த தீயை அணைக்க முயற்சி செய்தபோது தீ கொழுந்துவிட்டு எரிந்தது. எனவே, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் பூந்தமல்லி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரியின் முன்பகுதியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். அதற்குள் லாரியின் முன் பகுதி முழுவதும் எரிந்து நாசமானது. பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post சிமென்ட் கலவை லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: