பவானி, ஜூன் 8: தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் சித்தோடு அருகே டெக்ஸ்வேலி வளாகத்தில் மாநில அளவிலான மல்யுத்த போட்டிகள் 4 நாட்கள் நடைபெற்றது. இதில், ஈரோடு, நாமக்கல், சேலம், கடலூர், கன்னியாகுமரி, தர்மபுரி உட்பட 26 மாவட்டங்களை 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து வெற்றியும், பதக்கமும் பெற்றவர்கள் விவரம் : 23 வயதுக்குட்பட்டோர் பிரி ஸ்டைல் – 57 கிலோ எடைப்பிரிவு : சேலம் அசோக் பண்டாரி – தங்கம், பாலமுருகன் – வெள்ளி, ஈரோடு பாஸ்கரன், சேலம் சுஜித் – வெண்கலம். கிரிக்கோ ரோமன் 60 கிலோ எடை பிரிவு : நாமக்கல் கவுதம் – தங்கம், சேலம் நவீன்குமார் – வெள்ளி, ஈரோடு சொக்கலிங்கம், தர்மபுரி சத்யராஜ் – வெண்கலம். பெண்கள் பிரி ஸ்டைல் 53 கிலோ எடை பிரிவு : நாமக்கல் சாய் ஸ்ரீமதி – தங்கம், சேலம் அபிராமி – வெள்ளி, நாமக்கல் காயத்ரி வெண்கலம். ஆண்கள் மூத்தோர் சீனியர் பிரி ஸ்டைல் பிரிவு : நாமக்கல் பால விஷால் – தங்கம், சதீஸ்குமார் – வெள்ளி, சவுரப் மற்றும் சேலம் சிங்கார வேலன் – வெண்கலம். கிரிக்கோ ரோமன் 63 கிலோ பிரிவு : சேலம் முத்தரசன் – தங்கம், ஈரோடு சந்தோஷ் குமார் – வெள்ளி, சேலம் கோகுலக்கண்ணன், கடலூர் ஜீவா – வெண்கலம். மூத்தோர் பெண்கள் பிரி ஸ்டைல் 59 கிலோ எடை பிரிவு : தர்மபுரி யுவராணி – தங்கம், விருதுநகர் முத்துசெல்வி – வெள்ளி, ராஜலட்சுமி வெண்கலம். ஆண்கள் பிரிவில் சேலம் மாவட்டமும், பெண்கள் பிரிவில் நாமக்கல் மாவட்டமும் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றன. தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்க பொதுச்செயலாளர் லோகநாதன், டெக்ஸ்வேலி நிர்வாக இயக்குனர் குமார் ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வீரர்களை பாராட்டினார்.
The post சித்தோடு அருகே மாநில மல்யுத்த போட்டியில் 500 பேர் பங்கேற்பு appeared first on Dinakaran.