தமிழகத்தில் உள்ள 12 தேசிய நெடுஞ்சாலைகள் 4 வழிச்சாலையாக தரம் உயர்கிறது : ரூ26 கோடியில் அறிக்கை தயாரிக்கும் அதிகாரிகள்

சென்னை : தமிழகத்தில் உள்ள மாநில, மாவட்ட முக்கிய, மாவட்ட இதர சாலைகள் என மொத்தம் 63,650 கிமீ நீளம் கொண்ட சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாகன எண்ணிக்கை கணக்கிடப்பட்டு அந்த சாலைகளின் தரம் உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்த 746 கி.மீ நீளம் கொண்ட 12 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலை தரம் உயர்த்த மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பியது.

அதன்படி, 70 கி.மீ நீளம் கொண்ட காரைக்குடி-பட்டுக்கோட்டை-தஞ்சாவூர் சாலை, 65 கி.மீ நீளம் கொண்ட திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி சாலை, 105 கி.மீ நீளம் கொண்ட வள்ளியூர்-திருச்செந்தூர் சாலை, 30 கி.மீ நீளம் கொண்ட கொள்ளேகால்-ஹானூர்-எம்.எம் மலை-பாலாறு-மேட்டூர் சாலை, 98 கி.மீ நீளம் கொண்ட மேட்டுபாளையம்-பவானிசாலை, 38 கி.மீ நீளம் கொண்ட அவினாசி-மேட்டுப்பாளையம் சாலை, 77 கி.மீ நீளம் கொண்ட பழனி-கரூர் சாலை, 31 கி.மீ நீளம் கொண்ட பழனி-தாராபுரம் சாலை, 91 கி.மீ நீளம் கொண்ட ஆற்காடு-திண்டிவனம் சாலை, 19 கி.மீ நீளம் கொண்ட நெல்வாய்-பள்ளிகொண்டா சாலை, 51 கி.மீ நீளம் கொண்ட திண்டுக்கல்-நத்தம்-கொட்டாம்பட்டி சாலை ஆகிய 12 நெடுஞ்சாலைகளை தரம் உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதை ெதாடர்ந்து இரண்டு வழி தடமாக உள்ள அந்த சாலைகளை நான்கு வழிச்சாலைகளாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதற்காக, ரூ.26.58 கோடி செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு, இந்த திட்ட அறிக்கை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் ஒப்புதல் அனுப்பி வைக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: