ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு

டெல்லி : வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் 18ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவுக்கு எதிராக வேதாந்தா குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த ஜூலை 3ம் தேதி மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் சுற்றுச்சூழல் விதிகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டு வருவதாகவும் ஆலையில் இருந்து வெளியேறும் புகை அல்லது கழிவுகளால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.   

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: