கொல்லங்கோடு அருகே சூழால் ஊராட்சியில் தமிழகத்தில் கேரளா ஆக்கிரமித்த பகுதிகள் மீட்பு: இருமாநில அதிகாரிகள் அளந்து நிர்ணயம்

நித்திரவிளை: கன்னியாகுமரி மாவட்டம் சூழால் ஊராட்சியில் குமரி கேரள எல்லையை ஒட்டியுள்ள சங்குருட்டி – காரோடு சாலையில் பல்லுளி கிராம வார்டில் முல்லச்சேரி என்னும் பகுதி உள்ளது. இங்கு சாலையை ஒட்டி 2018-2019 கால கட்டத்தில் கேரள மாநிலம் பாறசாலை ஊராட்சி ஒன்றியம் காரோடு கிராம ஊராட்சி நிர்வாகத்தினர் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் மூன்று மீட்டர் அகலத்தில் கான்கிரீட் தளம் அமைத்தனர். மேலும்   பொதுமக்கள் பயன்படுத்தி வந்த குளத்தில் கழிவுநீர் சேரும் வகையில் சாலையின் குறுக்கே கான்கிரீட் தடுப்பு அமைத்தனர். இதனால் பொதுமக்கள் குளத்தில் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.  கேரளா     கான்கிரீட் தளம் அமைக்கும் வேளையில் தமிழகத்தில் உள்ளாட்சி அதிகாரங்கள் தனி அலுவலர் பொறுப்பில் இருந்தது. அப்போது  இதுகுறித்து அரசு அதிகாரிகள்  கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் முடிந்து 2020ல் உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்றனர். சூழால் ஊராட்சியில் இவான்ஸ் என்பவர் தலைவராக பொறுப்பேற்றார். அவர் இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு புகார் அளித்தார். இதையடுத்து இரு மாநில அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து ஆக்ரமிக்கப்பட்ட பகுதியில் உள்ள நிலத்தை அளந்து எல்லை நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழக அரசு தரப்பிலும், கேரள தரப்பிலும் அதிகாரிகள் கலந்து கொண்டு பிரச்னைக்குரிய இடத்தை அளந்து எல்லை நிர்ணயம் செய்தனர். அளவீட்டின் முடிவில்  கேரள ஊராட்சி நிர்வாகம் மூன்று  முதல் நான்கு மீட்டர் வரை ஆக்ரமித்து கான்கிரீட் தளம் அமைத்தது உறுதியானது.   இதையடுத்து இனி தமிழக பகுதியில் எவ்வித பணியும் கேரளா சார்பில் செய்ய கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது….

The post கொல்லங்கோடு அருகே சூழால் ஊராட்சியில் தமிழகத்தில் கேரளா ஆக்கிரமித்த பகுதிகள் மீட்பு: இருமாநில அதிகாரிகள் அளந்து நிர்ணயம் appeared first on Dinakaran.

Related Stories: