இதில் சித்தார்த் கலந்துகொண்டார். சுதீப்பை வாழ்த்த மும்பையிலிருந்து தனது கணவர் ரிதேஷ் தேஷ்முக்குடன் ஜெனிலியாவும் வந்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் பாய்ஸ் படத்தில் இடம்பெற்ற பிரேக் த ரூல்ஸ் என்ற பாடலை சித்தார்த் பாடினார். அப்போது பாடலுக்கு நடனமாடி ஜெனிலியா மகிழ்ந்தார். இதுபற்றி ஜெனிலியா கூறும்போது, ‘பொம்மரிலு (2006) படத்தில் நடித்த பிறகு மீண்டும் சித்தார்த்தை சந்திக்கவே இல்லை. இப்போதுதான் சந்திக்கிறேன். முன்னாவை ஹரிணி (‘பாய்ஸ்’ படத்தில் கேரக்டர்கள் பெயர்) 17 வருடங்களுக்கு பிறகு சந்தித்த தருணம், மறக்க முடியாதது’ என்றார். இதை வீடியோவாக வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் ஜெனிலியா பதிவு செய்திருக்கிறார்.
The post சித்தார்த்தை 17 வருடத்துக்கு பிறகு சந்தித்த ஜெனிலியா: வீடியோ வெளியிட்டு நெகிழ்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.