கொரோனா கட்டுப்பாடு காலத்தில் முககவசம் அணியாமல் சென்றவர் மீதான வழக்கு ரத்து; ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொரோனா காலத்தில் முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா பெரியநேசலூரை சேர்ந்தவர் தமிழ்மாறன். இவர் 2020  இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மறித்த கடலூர் மாவட்டம் வேப்பூர் போலீசார் தமிழ்மாறன் முக கவசம் அணியவில்லை என்றும் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தமிழ்மாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. ,இருதரப்பு வக்கீகளின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதற்கும் கொரோனா வைரசை பரப்ப காரணமாக இருந்துள்ளார் என்பதற்கும் எந்த ஆதாரங்களும் இல்லை. எனவே, அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ய முடியாது. எனவே, மனுதாரர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்….

The post கொரோனா கட்டுப்பாடு காலத்தில் முககவசம் அணியாமல் சென்றவர் மீதான வழக்கு ரத்து; ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: