புதுடெல்லி,: மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘இந்தியாவில் உள்ள சில கல்வி நிலையங்கள் ஏற்கெனவே வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படுகின்றன. பாதிப் படிப்பை இந்தியாவில் மேற்கொள்ளும் மாணவர்கள், பல்கலைக்கழக வளாகங்களில் படிப்பை முடிக்கின்றனர். உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு நிகராக கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் கல்வித் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தம் செய்ய பிரதமர் மோடி விரும்புகிறார்.
உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு நிகராக கல்வியின் தரத்தை உயர்த்த பிரதமர் மோடி விரும்புகிறார் :மத்திய கல்வித்துறை அமைச்சர்
