குண்டுமல்லி விலை வீழ்ச்சி

ராயக்கோட்டை, மே 16: திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் நடைபெறாததால், ராயக்கோட்டையில் குண்டுமல்லி விலை குறைந்து, நேற்று கிலோ ₹200க்கு விற்பனை செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், சூளகிரி, ராயக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ராயக்கோட்டை, பாலியனூர் கொட்டாய் பகுதியில், குண்டுமல்லி தோட்டங்கள் அதிக அளவில் உள்ளன. இங்கு விளைவிக்கப்படும் குண்டுமல்லி பூக்களை ஓசூர், பெங்களூரு, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். தற்போது கத்திரி வெயில் சுட்டெரிப்பதால், ராயக்கோட்டையில் குண்டுமல்லி விளைச்சல் அமோகமாக உள்ளது. ஆனால் பூக்களை பறிக்க கூலி ஆட்கள் கிடைப்பது இல்லை. இதனால் பெரும்பாலான விவசாயிகள், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து பூக்களை பறித்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். தற்போது அக்னி நட்சத்திர காலம் என்பதால், திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் நடைபெறாமல், குண்டுமல்லி தேவை குறைந்துள்ளது. கடந்த மாத இறுதியில் குண்டுமல்லி கிலோ ₹1300 வரை விற்பனையானது. தற்ேபாது கிலோ ₹200க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது பறிப்பு கூலிக்கு கூட கட்டுப்படி ஆகவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.

The post குண்டுமல்லி விலை வீழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: