காட்டுத்தீ பரவலை கட்டுப்படுத்த தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி

கூடலூர், : முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளை ஒட்டியுள்ள சாலை ஓரங்களில் காட்டுத்தீ பரவலை கட்டுப்படுத்த தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மசினகுடி, சிங்காரா, சீகூர் வனப்பகுதியில் சுமார் 400 கி.மீ. தூரத்திற்கு இந்த தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத பணிக்காலத்தில் வனப்பகுதியில் உள்ள புல்வெளிகள் செடி, கொடிகள் காய்ந்து சருகாகி விடுவது வழக்கம்.மேலும், மரங்களிலிருந்து உதிரும் சருகுகள் சேர்ந்து எளிதில் தீப்பிடிக்கும் தன்மைக்கு மாறி விடுகின்றன. இந்த வனப்பகுதிகளின் சாலையில் வாகனங்களில் செல்லும் பயணிகளால் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்கும் வகையிலும், வனப் பகுதியில் ஏற்படும் காட்டுத்தீ ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு பரவாமல் தடுக்கும் வகையிலும் ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் இந்த தீத்தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சாலைகளின் இருபுறமும் சுமார் 6 மீட்டர் தூரத்தில் செடி, கொடிகளை வெட்டி அவை உலர்ந்த பின்னர் அவற்றில் செயற்கையாக தீ ஏற்படுத்தி புற்கள், செடி, கொடிகளை எரித்து விடுவதால் அப்பகுதி வழியாக வனப்பகுதிக்குள் தீ பரவுதல் கட்டுப்படுத்தப்படுகிறது. மசினகுடியில் இருந்து தெப்பக்காடு, மாயார், சிங்காரா, ஊட்டி, பொக்காபுரம் செல்லும் பிரதான சாலைகளிலும், வனப் பகுதிகளுக்கு உள்ளே செல்லும் சாலைகளிலும் இதுபோன்று சாலைகளில் ஏற்படும் காய்ந்த புற்கள், செடி, கொடிகள் எரிக்கப்பட்டு சுமார் 400 கி.மீ. தூரத்திற்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்படுகின்றன.இந்த வருடத்திற்கு முதல் கட்டமாக முதுமலை புலிகள் காப்பகம் வெளிவட்ட மசினகுடி வனச்சரகத்தில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. முதுமலை வனப்பகுதிக்கு உட்பட்ட  மசினகுடி தெப்பக்காடு சாலையில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன….

The post காட்டுத்தீ பரவலை கட்டுப்படுத்த தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி appeared first on Dinakaran.

Related Stories: