பெங்களூரு: பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது முறைகேடாக ரூ.10 லட்சத்தை மாற்றிய வழக்கில், கர்நாடகா முன்னாள் மின்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார்மற்றும் 11 நண்பர்களின் அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. நாடு முழுவதும் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அப்போது, கர்நாடகாவில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் மின்துறை அமைச்சர் டி.கே.சிவகுமாரும், அவரது சகோதரர் டிகே சுரேசும் ராமநகரத்தில் உள்ள கார்ப்பரேஷன் வங்கியில் உரிய ஆவணங்களின்றி முறைகேடாக பணமாற்றம் செய்ததாக புகார் கூறப்பட்டது. இதற்கு அந்த வங்கியின் தலைமை மேலாளர் பிரகாஷ், டி.கே.சிவகுமாரின் முன்னாள் உதவியாளர் பத்பநாபய்யா உள்பட 11 பேர் உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இவர்கள் மீது ஊழல் தடுப்பு அதிகாரிகள், சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.
டி.கே.சிவகுமார் அலுவலகம் உள்பட கர்நாடகாவில் 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
