கர்நாடக மாநிலத்தில் 23 ஆயிரம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை

* பெங்களூருவில் மட்டும் 6,000 பேர்* ஆய்வில் அதிர்ச்சி தகவல்பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில், பல்வேறு காரணங்களால் சுமார் 23 ஆயிரத்து 118 குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை. அதிலும் அதிகப்படியாக பெங்களூருவில் மாநகராட்சியில், சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.கொரோனா வைரஸ் ஒட்டு மொத்த உலகத்தையும் புரட்டி போட்டுள்ளது. தொற்று பரவல் காரணமாக பல நாடுகளில் போடப்பட்ட ஊரடங்கால் உலக பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. தற்போதுதான் மெல்ல மெல்ல தொழில் துறை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நாடுகளில் ஆளும் அரசுகள், தொழில்முனைவோருக்கு பல சலுகைகளை அறிவித்து ஊக்குவிக்கின்றன. ஊரடங்கால் ஏற்றுமதி, இறக்குமதி கடுமையாக முடங்கி போனது. குறிப்பாக, விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், ஏற்றுமதி தொழிலதிபர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர். கொரோனா காரணமாக இந்தியாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழி கல்வி நடத்தப்பட்டது. இதற்காக, அனைத்தும் மாணவர்களும் தங்களது குடும்ப வசதிக்கு ஏற்ப லேப்டாப், கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் மூலம் ஆன்லைன் கல்வியில் பயின்று வந்தனர். பெரும்பாலான அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் தின கூலி தொழிலாளர்களாகவும், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் ஆகவும் இருக்கின்றனர். ஊரடங்கால் நிறுவனங்கள் மூடப்பட்டதாலும், ஆட்கள் குறைப்பாலும் இவர்களின் வேலை பறிபோனது. மேலும், அவர்களிடம் ஸ்மார்ட் போன் இல்லாததாலும், பள்ளி மற்றும் கல்லூரி கட்டணத்தை செலுத்த முடியாததால் அவர்களது குழந்தைகளால்00 வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை. இதனால் ஏராளமான மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.  இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள்  பள்ளிக்கு வராமல் இருப்பதைக் கவனத்தில் கொண்டு, வீடு வீடாகச் சென்று  கணக்கெடுப்பு நடத்துமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டது. இதையடுத்து,  அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் முடிவில், கர்நாடக மாநிலத்தில், குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 23 ஆயிரம் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளது தெரியவந்தது. இதுகுறித்து வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில், ‘மாநிலத்தில் பல்வேறு காரணங்களால் சுமார் 23 ஆயிரத்து 118 குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை. -பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில், 14-16 வயதுக்குட்பட்ட 4,465 குழந்தைகள், 6-14 வயதிற்குட்பட்ட 2,143 குழந்தைகள் என 6608 குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் உள்ளனர். பெங்களூரு மாநகராட்சிக்கு அடுத்தபடியாக பீதரில், 2609 குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை. உடுப்பியில் 174 குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை. இது மாநிலத்திலேயே மிகவும் குறைவு.கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக குடும்பங்களில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக 14 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளால் கல்வியை தொடர முடியவில்லை. குடும்பத்துக்காக பல குழந்தைகள் வேலைக்கு செல்ல வேணடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில், 23,118 குழந்தைகள் பல்வேறு காரணங்களுக்காக படிப்பை நிறுத்திவிட்டனர்’ என கூறப்பட்டிருந்தது….

The post கர்நாடக மாநிலத்தில் 23 ஆயிரம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை appeared first on Dinakaran.

Related Stories: