கரூர் அருகே கள்ளத்தனமாக டீசல் விற்பனை: போலீஸ் ஏட்டுவின் லாரி பறிமுதல்

கரூர்: கரூர் அருகே உள்ள தோரணகல்பட்டியில் கள்ளத்தனமாக டீசல் விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில் நேற்றிரவு மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பதிவு எண் இல்லாத 25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள டேங்கர் லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு டீசல் நிரப்பி கொண்டு இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த சரவணன் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது, லாரியில் சுமார் 5 ஆயிரம் லிட்டர் பயோடீசல் உள்ளது என்றும், இதற்கு எந்தவித உரிமமோ, ஆவணங்களோ இல்லை என்றும் டீசல் நிரப்பப்பட்ட லாரி கரூர் நகர டவுன் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் ஒருவருக்கு சொந்தமானது என்றும் தெரியவந்தது. மேலும் உரிமம் ஏதுமின்றி கள்ளத்தனமாக டீசல் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என்பதால் லாரிகள் டீசலுடன் பறிமுதல் செய்யப்பட்டது. கலெக்டர் பிரபு சங்கர் பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்…

The post கரூர் அருகே கள்ளத்தனமாக டீசல் விற்பனை: போலீஸ் ஏட்டுவின் லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: