கரூர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம்

கரூர், ஜூன் 22: கரூர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் கரூர் அரசு கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் 26 நிறுவனங்கள் கலந்து கொண்டன. கரூர் மாவட்டத்தில் படித்த பட்டதாரி மாணவர்கள் வேலை வாய்ப்பு வேண்டி 600 பேர் இந்த முகாமில் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 244 பேர் வேலை வாய்ப்புக்காக தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் கல்லூரி முதல்வர் அலெக்ஸாண்டர் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார். வேலை வாய்ப்பிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாக பிரதிநிதி தமிழ் வசந்தன் செய்திருந்தார். தாவரவியல் துறைத்தலைவர் கார்த்திக்கேயன், வேலை வாய்ப்பு பெற்றவர்களை வாழ்த்தினார். முகாம் ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் முகுந்தன் ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

The post கரூர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: