சென்னை: தமிழகத்தில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு எதிரொலியால் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்துக்குள் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் இதர பெரும்பாலான மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.