கணக்கெடுப்பில் விடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கிராம சபை கூட்டத்தில் பெயரை பதிவு செய்யலாம்

நாகப்பட்டினம்,அக்.2: நாகப்பட்டினம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று(2ம் தேதி) காந்தி ஜெயந்தி தினத்தில் நடைப்பெறும் கிராம சபை கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்ட உள்ளனர். எனவே தங்கள் பெயரை பதிவு செய்யாத மாற்றுத்திறனாளிகள் தங்கள் பகுதியுள்ள ஊராட்சி செயலாளர், மகளிர் திட்ட பணியாளர்களை தொடர்பு கொண்டு கிராமசபை கூட்டத்தில் தங்களது சுய விபரத்தினை https://tnrights.tnega.org/registration என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் அக்டோபர் 2வது வாரம் முதல் நவம்பர் 4வது வாரம் வரை வட்டார அளவில் நடைப்பெறவுள்ள மருத்துவ முகாமில் தவறாது கலந்துக்கொண்டு பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

The post கணக்கெடுப்பில் விடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கிராம சபை கூட்டத்தில் பெயரை பதிவு செய்யலாம் appeared first on Dinakaran.

Related Stories: