விழுப்புரம், ஆக. 8: விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர்கள் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே நல்லாவூர் கிராமத்தை சேர்ந்தவர் செங்கபால் மகன் கதிரவன் (எ) கதிர் (21). இதேபோல் வெங்கடேஷ் மகன் அஜய் (23). இவர்கள் இருவரும் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தாலும் ஜாமீனில் வெளியே வரும் அவர்கள் இந்த குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2ம் தேதி மலைகுட்டை அருகே இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட போது கிளியனூர் காவல் நிலைய போலீசார், 1 கிலோ 100 கிராம் எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் இந்த குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் அவர்கள் நடவடிக்கையை தடுக்கும் வகையில் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி. தீபக் சிவாச் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் பழனி நேற்று அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதனை தொடர்ந்து தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.
The post கஞ்சா விற்ற வாலிபர்கள் தடுப்பு காவல் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.