ககன்யானுக்கு முன் 2 ஆளில்லா விண்கலம் செலுத்த திட்டம்

புதுடெல்லி: மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய விண்வெளி துறை இணை அமைச்சர்  ஜிதேந்திர சிங் கூறுகையில், ‘கொரோனா தொற்று காரணமாக விண்வெளி திட்டங்கள் செயல்படுத்துவது தாமதமாகிறது. அடுத்த ஆண்டு மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு முன்பாக இரண்டு ஆளில்லா விண்கலங்களை விண்ணில் செலுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவும் திட்டமிடலில் உள்ளது. தொற்று நோய் காரணமாக இவை தாமதமாகின்றன. 2022ம் ஆண்டு இறுதியில் ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக இந்தியா முதலில் 2 ஆளில்லா விண்கலத்தை செலுத்தும். இதனுடன் வாயுமித்ரா என்ற ரோபாக்கள் அனுப்பி வைக்கப்படும். 2022ம் ஆண்டில் வீனஸ் திட்டம், 2022-2023ல் சோலார் திட்டம் மற்றும் 2030ம் ஆண்டில் விண்வெளி நிலையமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது’ என்றார்….

The post ககன்யானுக்கு முன் 2 ஆளில்லா விண்கலம் செலுத்த திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: