ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு-அரசு அறிவிப்புக்கு வரவேற்பு

நாமக்கல் : விவசாய முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானியை, சென்னையில் நேரில் சந்தித்து பேசினர். அப்போது, தமிழகத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள், மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில், முதற்கட்டமாக ஒரு லட்சம் மின் இணைப்புகள் ஓராண்டில் வழங்கப்படும் என்று அறிவித்தமைக்கு நன்றி தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் மின்வாரியத் தலைவரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதன் விபரம்: பூந்தோட்ட சர்வீசுக்கு வழங்கப்படும் மின் இணைப்பையும், இலவச மின் இணைப்பாக மாற்றித்தர வேண்டும். நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கிடப்பில் போடப்பட்டுள்ள மின்உற்பத்தி திட்டத்தை உடனடியாக துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மோகனூர் தாலுகாவில் துணை மின்நிலையம் அமைக்க காலதாமதம் ஏற்படுகிறது. அதை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க ஆவணம் செய்ய வேண்டும். ஒருவந்தூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட புதூர் அருகாமையிலுள்ள வடுகப்பட்டி, குஞ்சாயூர் ஆகிய ஊர்களுக்கு திருச்சி மாவட்டத்தில் இருந்து வரும் மின் இணைப்பை நாமக்கல் மாவட்டத்தினுடைய மின் இணைப்பிற்கு மாற்றித் தரவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்….

The post ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு-அரசு அறிவிப்புக்கு வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: