ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜ அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

 

திருவள்ளூர், ஜூலை 29: திருவள்ளூரில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் துரை சந்திரசேகர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். நகர தலைவர் ஜே.ஜோஷி பிரேம் ஆனந்த் வரவேற்றார்.

மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏகாட்டூர் ஆனந்தன், ஒய்.அஸ்வின் குமார், தளபதி மூர்த்தி, ஆல்பர்ட் இன்பராஜ், சரஸ்வதி, புங்கத்தூர் அருள், மாயாண்டி, அசின் பாஷா, கே.டி.பிரகாஷ், தீபன் லாரன்ஸ், வட்டாரத் தலைவர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, எம்.டி.சதீஷ், புருஷோத்தமன், ராஜேஷ், ஜெயசீலன், வினோத்குமார், அருள் செல்வகுமார், பார்த்தசாரதி, சபீர், டேவிட் பில்லா உட்பட பலர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது துரை சந்திரசேகர் எம்எல்ஏ பேசும்போது, ஒன்றிய பாஜக அரசு காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கும், தமிழகத்திற்கும் நிதி ஒதுக்காமல் வஞ்சித்துள்ளது. கூட்டணியில் உள்ள ஒரு சில மாநிலத்திற்கு மட்டும் ஆட்சியை காப்பாற்றும் நோக்கத்தில் நிதி ஒதுக்கி உள்ளது. தொடர்ந்து ஒன்றிய அரசு கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்து வருகிறது என்றார்.

The post ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜ அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: