ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தல் தரங்கம்பாடி அருகே பருத்தி சாகுபடி குறித்த பயிற்சி முகாம்

தரங்கம்பாடி,மார்ச் 1: தரங்கம்பாடி அருகே மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில் பருத்தி சாகுபடி குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின் மூலம் செம்பனார்கோவில் வட்டார வேளாண்மை துறை சார்பில் தரங்கம்பாடி அருகே மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில் விவசாயிகளுக்கு பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து பண்ணை பள்ளி நடைபெற்றது. நிகழ்ச்சியில் செம்பனார்கோவில் வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர் ரேகா வரவேற்றார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உழவியல் துறை துணை பேராசிரியர் டாக்டர் ஆனந்தன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிர் மேலாண்மை குறித்தும் பருத்தி தொழில்நுட்பம் குறித்தும் பேசினார். நிகழ்ச்சியில் செம்பனார்கோவில் வட்டார வேளாண்மை அலுவலர் விண்ணரசி கலந்து கொண்டு பேசினார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண்மை விரிவாக்க பணியாளர் பிரபாகரன் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். பயிற்சிக்காக ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சிவசஞ்சீவி செய்திருந்தார். உதவி தொழில் நுட்ப மேலாளர் செல்வக்குமரன் நன்றி கூறினார்.

The post ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தல் தரங்கம்பாடி அருகே பருத்தி சாகுபடி குறித்த பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: