என்சிசி மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி முகாம்

ராஜபாளையம் பிப்.13: ராஜபாளையத்தில் நடைபெற்ற என்சிசி தமிழ்நாடு ஐந்தாவது சைகை அணி துப்பாக்கி சுடும் அடிப்படை பயிற்சி முகாமில் மூன்று மாவட்டங்களில் இருந்து 1500 தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கான துப்பாக்கி சுடும் அடிப்படை பயிற்சி முகாம் நடைபெற்றது.

டெல்லியில் நடைபெறும் தல் சைனிக் முகாமில் கலந்து கொள்வதற்கான இந்த அடிப்படை பயிற்சி முகாமில் நெல்லை, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இயங்கும் 6 கல்லூரிகள் மற்றும் 13 பள்ளிகளை சேர்ந்த 1,500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தேசிய மாணவர் படை அதிகாரிகள் மற்றும் ஜூனியர் கமிஷன் அதிகாரி ஜெலஸ்டின் முன்னிலையில் மாணவ, மாணவிகளுக்கு துப்பாக்கி சுடுதல் குறித்த அடிப்படை விளக்கம் அளிக்கப்பட்டது.

முகாமில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு மதுரையில் நடைபெறும் பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்படுவர். மதுரையில் நடைபெறும் பயிற்சியில் தேர்வு பெறும் தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள் வரும் நவம்பர் மாதம் டெல்லியில் நடைபெற உள்ள தல் சைனிக் முகாமில் கலந்து கொள்வார்கள் என ஐந்தாவது சைகை அணி அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post என்சிசி மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: