ஊத்துக்கோட்டையிலிருந்து கிளாம்பாக்கத்திற்கு பஸ்கள் இயக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

 

ஊத்துக்கோட்டை, மே 31: ஊத்துக்கோட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திர மாநிலமான புத்தூர், திருப்பதி, காளஹஸ்தி, நகரி ஆகிய பகுதிகளுக்கு 38 பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த அரசு தனியார் கம்பெனி ஊழியர்கள் ஊத்துக்கோட்டை பஸ் நிலையத்திற்கு வந்து தாங்கள் பணிபுரியும் சென்னை, செங்குன்றம், பாரிமுனை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பஸ் மூலம் வேலைக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் ஊத்துக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் தஞ்சாவூர், திருச்சி, மதுரை, கன்னியாகுமாரி ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால் மாதவரத்திலிருந்து பஸ்கள் இல்லாததால், கிளாம்பாக்கத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.

இதற்கு முன்பு வெளியூர்களுக்கு செல்ல கோயம்பேட்டில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்ட போது, ஊத்துக்கோட்டையில் இருந்து கோயம்பேட்டிற்கு பஸ்கள் இயக்கப்பட்டது. அதுபோல தற்போது ஊத்துக்கோட்டை பணிமனையில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post ஊத்துக்கோட்டையிலிருந்து கிளாம்பாக்கத்திற்கு பஸ்கள் இயக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: