×

உற்பத்தி நிறுத்த போராட்டம் வாபஸ்

திருப்பூர், நவ.17: திருப்பூர் பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் பனியன் உற்பத்தியாளர்களுக்கு இடையே இந்த ஆண்டு 7 சதவீத கூலி உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. காங்கயம் சாலையில் உள்ள ஒரு நிறுவனம் மட்டும் ஒப்பந்தத்தின்படி கூலி தேர்வு வழங்கப்படாமல் இருந்துள்ளது. இதனை கண்டிக்கும் வகையில் அந்த நிறுவனத்தின் உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட போவதாக பவர் டேபிள் உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்பந்தத்தின் படி கூலி வழங்க ஒப்புக்கொண்டதை அடுத்த நாளைய தினம் நடைபெறுவதாக இருந்த போராட்டம் திரும்ப பெறப்படுவதாக பவர் டேபிள் உரிமையாளர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

The post உற்பத்தி நிறுத்த போராட்டம் வாபஸ் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tirupur Power Table Owners Association ,Banyan Manufacturers ,Kangayam Road ,Dinakaran ,
× RELATED திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து..!!