உயர்நிலை மன அழுத்தம் உள்ள 4,484 போலீசாருக்கு கவுன்சலிங்: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

மதுரை: உயர்நிலை மன அழுத்தமுள்ள 4,484 போலீசாருக்கு தேவையான சிகிச்சை மற்றும் கவுன்சலிங் வழங்கப்படுவதாக ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் கோவில்பட்டி கிளைச்சிறையில் இறந்தது தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரித்தது. இந்த சம்பவம் குறித்து முதலில் சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடப்பட்டது. பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, தற்ேபாதைய நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், ‘‘காவல்துறையினரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பெங்களூரு நிம்கான்ஸ் அமைப்புடன் இணைந்து காவலர்களுக்கான நல்வாழ்வுத் திட்ட முகாம் பல கட்டமாக நடத்தப்படுகிறது. மு98,531 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 41 பேர் டிப்ளமோ பயிற்சி முடித்துள்ளனர். 205 பேர் பயிற்சியில் உள்ளனர். மேலும் ஓராண்டுக்கு பயிற்சி திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 4,484 போலீசாருக்கு உயர் நிலை பதற்றம் மற்றும் மன அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை, கவுன்சலிங் மற்றும் தொடர் ஆலோசனையும் வழங்கப்படுகிறது’’ என அதில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்….

The post உயர்நிலை மன அழுத்தம் உள்ள 4,484 போலீசாருக்கு கவுன்சலிங்: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: