உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்பு: பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் குடியரசுத் தலைவர்

டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்கிறார். அவருக்கு குடியரசுத் தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக தற்போது யு.யு.லலித் பதிவியேற்கிறார். குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நிகழ்ச்சியில் பங்குபெற, குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், உள்துறைஅமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், எம்.பி.கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற என்.வி.ரமணா, உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள், நீதிபதிகள் முன்னிலையில் இந்த பதவி பிரமாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. யு.யு.லலித் 1957ஆம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் நவம்பர் மாதம் 9ம் தேதி பிறந்தார். அவர் சட்ட படிப்பை 1983ம் ஆண்டு முடித்தார். பிறகு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். கடந்த 2004ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் என்ற அந்தஸ்த்தை பெற்றார். அதனை தொடர்ந்து 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி யு.யு.லலித் அப்போதைய தலைமை நீதிபதி இவரை பரிந்துரைத்தார். உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி, நீதிபதியாக பதவி உயர்வு பெற்றவர்களில் 2வது நபராக யு.யு.லலித் பார்க்கப்படுகிறார். பொதுவாக, தலைமை நீதிபதியாக உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் பதவி ஏற்பார்கள், அதன் வரிசையில் யு.யு.லலித் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார். அவர் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி வரை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா நேற்றுடன் ஓய்வு பெறுவதை தொடர்ந்து, இன்று உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றார். …

The post உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்பு: பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் குடியரசுத் தலைவர் appeared first on Dinakaran.

Related Stories: