மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், சித்தார்கோட்டை கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளன. இங்கு சவுடு மண் அள்ளத் தடை கோரிய மனுவை பொதுநலன் மனுவாக ஐகோர்ட் மதுரை கிளை விசாரித்து தூத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் சவுடு மண் அள்ள தடை விதித்தது. இதுதொடர்பாக நேற்று நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர் முன், தொழில்துறை முதன்மை செயலர் முருகானந்தம் தரப்பில் தாக்கல் செய்த பதிலில், வருவாய்த்துறை, கனிமவளத்துறை மற்றும் போலீசாரால் கடந்த 5 மாதங்களில் 3,365 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.74 லட்சத்து 26 ஆயிரத்து 958 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டிருந்தது.
மணல் கடத்தியவர்களிடம் ரூ.74 லட்சம் அபராதம் வசூல்
