குன்னூர்: குன்னூரில் குடியிருப்பு பகுதிக்குள் இரவில் புகுந்து நாயை தூக்கி சென்ற சிறுத்தையால் பொதுமக்கள் பீதியமடைந்தனர். சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பாய்ஸ் கம்பெனி அருகில் நல்லப்பன் தெரு உள்ளது. இங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் நேற்று அதிகாலை 3 மணியளவில் சிறுத்தை நடமாடியது. தொடர்ந்து வீட்டின் முன் இருந்த நாயை வேட்டையாடி தூக்கிச் சென்றது.
குன்னூரில் குடியிருப்புக்குள் புகுந்து நாயை தூக்கி சென்ற சிறுத்தை
