வெளிநாட்டு நிதி முறைகேடு வழக்கு :பஞ்சாப் முதல்வர் மகனுக்கு சம்மன்; 27ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு

ேகாரக்பூர்,:உத்தரபிரதேச மாநிலம் குஷினகர் அடுத்த பார்டி கிராமத்தை சேர்ந்த பிகாரி குமார் என்பவர், தனது ரிக்‌ஷாவில் தெருக்களில் சுற்றித் திரிந்து பழைய பேப்பர், இரும்பு, பாத்திரம் போன்றவற்றை சேகரித்து குடும்பத்தை நடத்தி வந்தார். ஐந்தாம் வகுப்பு வரை படித்த இவரது மகன் அரவிந்த் குமார் மருத்துவராக வேண்டும் என்ற இலக்கோடு பிளஸ் 2 தேர்வை முடித்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ராஜஸ்தானில் உள்ள கோட்டாவிற்கு சென்று ‘நீட்’ தேர்வு மையத்தில் சேர்ந்து படித்தார். முதல் முயற்சியில் நீட் தரவரிசை தேர்வாக வில்லை என்றாலும், இந்தாண்டு நடந்த தேர்வில் தனது இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்றார்.

இதுகுறித்து அரவிந்த் குமார் கூறுகையில், ‘கோரக்பூரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் படித்தேன். தினமும் 8 கிலோமீட்டர் சைக்கிளில் சென்று 10ம் வகுப்பில் 48% மதிப்பெண்ணும், 12ம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றேன். இவ்வளவு குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கூட, டாக்டராக வேண்டும் என்று விரும்பினேன். அதற்காக என்னை தயார்படுத்திக் கொண்டேன். பயிற்சி வகுப்பு சேர ஆசிரியர்கள் வழிகாட்டினர். எம்பிபிஎஸ் படித்த பிறகு எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்று விரும்புகிறேன்.

நான் டாக்டராக படிப்பை முடித்து எனது கிராமத்தில் உள்ள பெற்றோரை கவுரவிப்பேன். நான் டாக்டராக வேண்டும் என்று தந்தை விரும்பினார். ஆனால், நீட் தேர்வு என்றால் என்னவென்று அவருக்கு இன்னும் தெரியாது. எனது நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு, நீட் கட்டணத்தில் 75 சதவீத தள்ளுபடி வழங்கினர். அகில இந்திய அளவில் 11,603 ரேங்கும், ஓபிசி பிரிவு 4,392 ரேங்கும் பெற்று நீட் தேர்வில் 620 மதிப்பெண்களைப் பெற்றேன்’ என்றார். கடினமான உழைப்பால் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் அரவிந்த் குமாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories: