இலங்கை 107 நாளுக்கு பின் அதிபர் அலுவலகம் மீண்டும் திறப்பு

கொழும்பு: இலங்கையில் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்ட அதிபர் அலுவலகம் 107 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டது. அதிபர் மாளிகையில் இருந்து 40 தங்க பிளேட்டுகளை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அதிபர், பிரதமராக இருந்த கோத்தய மற்றும் மகிந்த ராஜபக்சே பதவி விலகக் கோரி கடந்த ஏப்ரல் 9ம் தேதி முதல் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நெருக்கடி முற்றியதால், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். புதிய பிரதமராக பதவியேற்ற ரணில், அதிபர் கோத்தபயவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். ஆனால், இருவரும் பதவி விலகவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், கடந்த 9ம் தேதி அதிபர், அதிபர், பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகத்தை கைப்பற்றி சூறையாடினர். இதனால், நாட்டை விட்டு ஓடி சிங்கப்பூரில் தஞ்சமடைந்த கோத்தபய, அங்கிருந்து தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய அதிபராக ரணிலும், புதிய பிரதமராக திணேஷ் குணவர்தனவும் பதவியேற்றனர். இதையடுத்து, அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடியவர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தி கலைத்தது. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், அதிபர் அலுவலகத்தில் சுத்தம் செய்யும் பணி மற்றும் புனரமைப்பு பணிகள் முடிந்த நிலையில், 107 நாட்களுக்கு பின் அதிபர் அலுவலகம் நேற்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது. அதன்படி, அதிபர் அலுவலக பணிகள் வழக்கம் போல் நேற்று நடந்தது.  இதற்கிடையே, அதிபர் மாளிகை மற்றும் அலுவலகத்தில் இருந்து 1000க்கும் மேற்பட்ட பொருட்கள் மாயமாகி உள்ளதாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சூழலில் தங்க முலாம் பூசப்பட்ட 40 பிளேட்டுகளை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  …

The post இலங்கை 107 நாளுக்கு பின் அதிபர் அலுவலகம் மீண்டும் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: