இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி விளைவித்த இந்தக் காய்கறிகளை துபாய்க்கு ஏற்றுமதி செய்வதற்கு முன்வந்தது ஜார்கண்ட் அரசு..!

டெல்லி: தோனி விளைவித்த இந்தக் காய்கறிகளை துபாய்க்கு ஏற்றுமதி செய்வதற்கு ஜார்க்கண்ட் அரசு முன்வந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி முழு விவசாயி ஆகவே மாறியுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபிறகு தனது பண்ணை வீட்டில் உள்ள 40 முதல் 50 ஏக்கர் வரையிலான விவசாய நிலத்தில் இயற்கை முறைப்படி, பப்பாளி மற்றும் வாழை உள்ளிட்டவற்றை பயிரிட்டு வளர்த்து வந்தார். அதுமட்டுமின்றி இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உரத்தின் மூலமே தனது இடத்தில் தோனி விவசாயம் செய்து வருகிறார். தனது தோட்டத்தில் அந்த உரம் தரும் விளைச்சலைப் பொறுத்து, அதனை அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் உர விற்பனையை தோனி தனது தரப்பிலிருந்து தொடங்கவுள்ளதாக தெரிகிறது.மேலும், சமீபத்தில் டிராக்டர் ஒன்றை தோனி ஓட்டிய வீடியோ வெளியானது. அத்துடன் செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளில் இருக்கும் ஆபத்து குறித்தும், இயற்கை விவசாயத்தின் நன்மை குறித்தும் தோனி விளக்கியிருந்தார். இதேபோல் மற்றொரு வீடியோவில், தோனி இயற்கை முறையில் தர்பூசணி விதைகளை நிலத்தில் ஒவ்வொன்றாக ஊன்றும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.இந்நிலையில், தற்போது தோனி தனது பண்ணை வீட்டில் பயிரிட்டிருந்த பயிர்கள் விளைச்சல் கொடுக்க தொடங்கியுள்ளன. தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை தோனி இயற்கை முறையில் விளைவித்துள்ளார். தோனி விளைவித்த இந்தக் காய்கறிகளை துபாய்க்கு ஏற்றுமதி செய்வதற்கு ஜார்க்கண்ட் அரசு முன்வந்துள்ளது. தங்களது வேளாண்மைத்துறை மூலம் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொழில் தொடங்க உலக நிறுவனங்கள் முன்வருவதில்லை. இதனை மாற்ற தோனி மூலம் அதனை சாத்தியப்படுத்தவும், மற்ற விவசாயிகளும் பலனடைவார்கள் என்றும் அம்மாநில அரசு அதிகாரிகள் இதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ராஞ்சியில் உள்ள செம்போ கிராமத்தில் தோனியின் பண்ணை வீடு அமைந்துள்ளது. முழு பண்ணை இல்லமும் சுமார் 43 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 10 ஏக்கர் நிலத்தில் ஸ்ட்ராபெர்ரி, முட்டைக்கோஸ், தக்காளி, ப்ரோக்கோலி, பட்டாணி, ஹாக் மற்றும் பப்பாளி போன்றவற்றை தோனி பயிரிட்டு வருகிறார்….

The post இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி விளைவித்த இந்தக் காய்கறிகளை துபாய்க்கு ஏற்றுமதி செய்வதற்கு முன்வந்தது ஜார்கண்ட் அரசு..! appeared first on Dinakaran.

Related Stories: