இடைக்கோடு அரசு மருத்துவமனை கட்டிடத்தில் விரிசல்கள்: அச்சத்தில் நோயாளிகள்

 

அருமனை.நவ.20: இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் 17-12-2005ம் ஆண்டு சுமார் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் குறுகிய காலத்திலேயே கட்டிடத்தில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டு இருப்பது கட்டிடத்தின் உறுதி தன்மையை கேள்விக் குறியாக்கி உள்ளது. அது மட்டுமல்லாமல் அங்கு வரும் நோயாளிகள் நீர் கசிவால் தாய் சேய் கட்டிடத்தை பயன்படுத்த அச்சமாக இருக்கிறது என்று தெரிவித்தனர். சுமார் 18 ஆண்டுகளில் நீர்க்கசிவு மற்றும் கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் கட்டுமான பணி தரமாக நடைபெறவில்லை என்பது குறித்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். எனவே அதிகாரிகள் உடனடியாக கட்டிடத்தை ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

The post இடைக்கோடு அரசு மருத்துவமனை கட்டிடத்தில் விரிசல்கள்: அச்சத்தில் நோயாளிகள் appeared first on Dinakaran.

Related Stories: