இடுவம்பாளையத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

 

திருப்பூர், ஜன.26: இந்தி திணிப்புக்கு எதிராக, தாய்மொழியாம் தமிழை காத்திடும் போரில் தம் இன்னுயிர் ஈந்து தாய்மொழி காத்த தியாகிகளின் ஈகத்தை, தியாகத்தை நினைவு கூர்ந்து போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி திருப்பூரில் இடுவம்பாளையம், காமாட்சியம்மன் கோயில் திடலில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது.

இதற்கு செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு. நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கழக சட்டதிட்ட திருத்தக்குழு செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் இரா.கிரி ராஜன், திருப்பூர் வடக்கு தொகுதி தேர்தல் பொறுப்பாளர் திராவிட மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த கூட்டத்தில் நிர்வாகி திலக்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post இடுவம்பாளையத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: