காவிரியில் மத்திய அரசு தமிழகத்துக்கு ஓரவஞ்சனை செய்கிறது : அமைச்சர் சி.வி. சண்முகம்

டெல்லி : காவிரியில் மத்திய அரசு தமிழகத்துக்கு ஓரவஞ்சனை செய்கிறது என்று அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு 4 டி.எம்.சி தண்ணீர் இந்த மாதம் திறக்க கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரவை மீறினால் கர்நாடக அரசு கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு 10 நாள் அவகாசம் கோரியதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கினை சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

இதன் பிறகு பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், கோடை காலம் என்பதால் குடிநீருக்காக தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றார்.இதனைத் தொடர்ந்து காவிரி விவகாரத்தில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவதாக வாதம் செய்ததாகவும், மத்திய அரசு 10 நாள் அவகாசம் கோரியதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது என்றும் கூறினார். இதனிடையே இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என கடுமையாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததாகவும் அவர் எடுத்துரைத்தார்.

Related Stories: