×

நான் கூறுவது மட்டுமே பாரதிய ஜனதா கட்சியின் கருத்து: தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி

சென்னை: நான் கூறுவது மட்டுமே பாரதிய ஜனதா கட்சியின் கருத்து என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நடிகரும், பாஜக பிரமுகரான எஸ்.வி. சேகர் பத்திரிக்கையாளர்கள் குறித்து முகநூலில் கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் வந்ததையடுத்து அந்தப் பதிவை எஸ்.வி.சேகர் நீக்கினார். இதனையடுத்து பெண் பத்திரிக்கையாளர்கள் பலர் தி.நகரில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை., 'பத்திரிக்கையாளர்கள் குறித்து சிலர் வெளியிட்டுள்ள கருத்துகள் பாஜக கருத்து அல்ல. நான் கூறுவது மட்டுமே பாரதிய ஜனதா கட்சியின் கருத்து என கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட நபரை அழைத்து கண்டித்து, பாரதிய ஜனதா குறித்த கருத்துக்களை நீக்க சொல்லவிட்டோம். பத்திரிக்கையாளர்களை பாஜக மதிக்கிறது என்று தெரிவித்துள்ளார். பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தியாளர் சந்திப்புகளில் சர்ச்சை கருத்துக்களை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED தமிழ்நாட்டில் இருந்து மக்களவை...