ஆகாய தாமரைகளை அகற்ற கோரிக்கை

ராசிபுரம்,, ஜூலை 4: வெண்ணந்தூர் அருகே ஓ.சவுதாபுரம் பகுதியில், சேமூர் ஏரி சுமார் 450 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு சேலம், சேர்வராயன் மலைப்பகுதியில் இருந்து பல்வேறுஏரிகளுக்கு தண்ணீர் வருகிறது. தண்ணீர் நிரம்பிய பிறகு ஆத்துமேடு வழியாக பரமத்திவேலூர் பகுதியில், உள்ள காவிரி ஆற்றில் கலக்கிறது.இந்நிலையில், கடந்த சில வாரங்களாக சேலம் பகுதியில் பெய்த மழையால், சேமூர் ஏரி நிரம்பியது. இதில் பல வருடங்களுக்கு முன்னர், ஏரியில் மீன் பிடி குத்தகை சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதிலிருந்து மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் ஏரியில் அதிகளவு முள் செடிகள் வளர்ந்துள்ளது. ஏரி முழுவதும் ஆகாயத்தாமரை சூழப்பட்டுள்ளது. இதனால் நீராதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன்பிடி குத்தகை மீண்டும் விடப்பட்டு ஏரி சுத்தம் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆகாய தாமரைகளை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: