×

அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

 

தொண்டி, ஜூலை 7: தொண்டி அருகே மச்சூர் கிராமத்தில் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. தொண்டி அருகே மச்சூர் கிராமத்தில் உள்ள பூர்ணா, புஷ்கலா சமேத கூத்த பெருமாள் அய்யனார், சின்ன கருப்பர்,பெரியகருப்பர், முனீஸ்வரன், ராக்கச்சி, காளியம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கடந்த திங்கள் கிழமை அனுக்ஞை பூஜையுடன் விழா துவங்கியது.

செவ்வாய் கிழமை கணபதி ஹோமம், முதல் கால யாகம், புதன் கிழமை இரண்டு மற்றும் மூன்றாம் யாகசாலை, பூர்ணாகுதி தீபாதாரனை நடைபெற்றது. நேற்று காலை புனிதநீர் அடங்கிய கலசங்களை தாங்கி கோவிலை வலம் வந்த சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓதி கும்பங்களில் புனிதநீர் தெளிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுற்றுவட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Ayyanar Temple ,Kumbabhishekam ,Thondi ,Ayyanar ,Machur ,Thondi.… ,
× RELATED வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைக்கும் பணி துவக்கம்