நச்சுவாயு தாக்குதல் நடத்திய ஜப்பான் சாமியார் உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனை

டோக்கியோ : ஜப்பானின் சுரங்கப் பாதையில் நச்சு வாயு தாக்குதல் நடத்தி 13 பேர் உயிரிழப்புக்கு காரணமான ஜப்பான் சாமியார் உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஒரு சுரங்கப் பாதையில் கடந்த 1995ம் ஆண்டில் ‘சரின்’ என்ற நச்சுவாயு தாக்குதல் நடத்தப்பட்டு, அதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே மூச்சுத் திணறி உயிரிழந்தனர். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மூக்கிலும் வாயிலும் ரத்தத்துடன் மூச்சுத் திணறி சுரங்கப் பாதையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஓடி வந்த கொடூர சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்திற்கு ஆம் ஷின்ரிக்யோ என்ற வழிபாட்டு குழு காரணம் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, இந்தக் குழுவின் தலைவர் ஷோகோ அஷாஹரா மற்றும் உறுப்பினர்கள் 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த தண்டனைக்கு பாதிக்கப்பட்ட மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதை கேட்டவுடன்தான் மிகவும் அமைதியாக உணர்ந்ததாகவும், உலகம் மிகவும் ஒளிமயமாக தெரிந்ததாகவும், டோக்கியோவை சேர்ந்த சினிமா இயக்குநரும், சுரங்க பாதை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருமான ஆத்சுஷி சகஹாரா தெரிவித்தார். ஜப்பானில் 1911க்கு பிறகு நடத்தப்பட்டுள்ள மிகப்பெரிய மரண தண்டனை இதுவாகும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: