அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டி: 45 திமுக நிர்வாகிகள் நீக்கம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை

சென்னை: திமுக வேட்பாளர்களை எதிர்த்தும், தோழமைக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்தும் போட்டியிட்ட 45 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.திமுக பொது செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், திமுக வேட்பாளர்களை எதிர்த்தும், தோழமைக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்தும் போட்டியிட்ட கோவை வடக்கு மாவட்டம் கோவை மாநகராட்சி 89வது வார்டு குனியமுத்தூர் பகுதி பொறுப்புக்குழு உறுப்பினர் கே.கவுரிசங்கர், கூடலூர் நகராட்சி 13வது வார்டைச் சேர்ந்த மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் கோம், சவுந்தர்யராஜன், 25வது வார்டைச் சேர்ந்த பேரூர் முன்னாள் செயலாளர் என்.கனகராஜ், 19வது வார்டைச் சேர்ந்த மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அன்புச்செல்வன், 3வது வார்டைச் சேர்ந்த மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஆர்.கவுதமன், 19வது வார்டைச் சேர்ந்த மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ஏ.கருப்புசாமி, காரமடை நகராட்சி 1வது வார்டு செயலாளர் ஆர். செல்வராஜ், 8வது வார்டைச் சேர்ந்த இளைஞர் அணி எம்.பிரதாப், 12வது வார்டை சேர்ந்த அவைத்தலைவர் ரங்கசாமி, 14வது வார்டைச் சேர்ந்த வார்டு செயலாளர் ராயப்பன், 21வது வார்டைச் சேர்ந்த மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் குட்டி (பல) கிருஷ்ணமூர்த்தி-சிறுமுகை பேரூராட்சி, 12வது வார்டு, கிளைச் செயலாளர் அட்டை துரைசாமி, மேட்டுப்பாளையம் நகராட்சி 17வது வார்டு கிளைச் செயலாளர் ரா.மனோகரன், அன்னூர் பேரூராட்சி 1வது வார்டு பிரதிநிதி சக்திவேல்.கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி 1வது வார்டு கார்த்திகா செந்தில்குமார், 25வது வார்டு பாலகிருஷ்ணவேணி, 28வது வார்டு எம்.லட்சுமி, வால்பாறை நகராட்சி 4வது வார்டைச் சேர்ந்த மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ஜே.பாஸ்கர், கோட்டூர் பேரூராட்சி 5வது வார்டு எம்.சுபத்ரா, 14வது வார்டைச் சேர்ந்த கோவை தெற்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு முன்னாள் அமைப்பாளர் மு.தேவேந்திரன்; கோவை கிழக்கு மாவட்டம், கோவை மாநகராட்சி, 85வது வட்டத்தைச் சேர்ந்த ரட்சண, 94வது வட்டத்தைச் சேர்ந்த கோவை கிழக்கு மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் பரிமலராணி, குறிச்சி வடக்குப் பகுதி பொறுப்புக் குழு உறுப்பினர் கோவிந்தராஜ், 97வது வட்டத்தைச் சேர்ந்த கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி – வெள்ளலூர் பேரூராட்சி, 8வது வார்டைச் சேர்ந்த மதுக்கரை கிழக்கு ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் கே.ஜெகதீஸ்வரன். 9வது வார்டைச் சேர்ந்த மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஜெயக்குமார், 11வது வார்டு பேக்கரி கனகராஜ், கோவை மாநகர் கிழக்கு மாவட்டம், சிங்காநல்லூர் பகுதி-1ன் பகுதி மகளிர் அணி அமைப்பாளர் விமலா ராஜேந்திரன், 70வது வார்டைச் சேர்ந்த மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் சித்ரகலா, 27வது வட்டப் பொறுப்பாளர் பி.டி.முருகேசன், கோவை மாநகர் மேற்கு மாவட்டம், கோவை மாநகராட்சி, 10வது வார்டைச் சேர்ந்த சரவணம்பட்டி பகுதி முன்னாள் செயலாளர் மாணிக்கம் (எ) ச.மருதாசலம், 11வது வார்டைச் சேர்ந்த மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் செ.கோபிநாத், 12வது வார்டைச் சேர்ந்த பழைய 42வது வட்டம் – புதிய 12வது வட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கந்தசாமி, 14வது வார்டு ஆர்.ஜே.திலகவதி, 19வது வார்டு கே.பிரியங்கா, 31வது வார்டைச் சேர்ந்த ஆதிதிராவிடர் நலக்குழு முன்னாள் அமைப்பாளர் வி.ரவிக்குமார்.34வது வார்டைச் சேர்ந்த மாவட்ட சிறு பான்மையினர் நலஉரிமை பிரிவு அமைப்பாளர் ஆர்.மைக்கேல்; திருப்பூர் தெற்கு மாவட்டம், ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி, 1வது வார்டு ஆனந்தி, 5வது வார்டு பொறுப்பாளர் நந்தகுமாரன், 6வது வார்டு சாந்தி – சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி, 3வது வார்டு பவுஜியாபேகம், 4வது வார்டைச் சேர்ந்த மாவட்ட சிறுபான்மை நலஉரிமை பிரிவு துணை அமைப்பாளர் முகமது பிலால், 12வது வார்டு பொறுப்பாளர் சுரேஷ், 15வது வார்டைச் சேர்ந்த 3வது வார்டு பொறுப்பாளர் எம்.சங்கீதா முருகேசன்; திண்டுக்கல் மேற்கு மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி, 1வது வார்டைச் சேர்ந்த 18வது வட்டச் செயலாளர் து.சுப்பிரமணி ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்….

The post அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டி: 45 திமுக நிர்வாகிகள் நீக்கம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: