அணைக்கட்டு அடுத்த தென்னஞ்சாலை கிராமத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் எம்எல்ஏவிடம் மனு

அணைக்கட்டு : அணைக்கட்டு அடுத்த தென்னஞ்சாலை கிராமத்தில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பொதுமகக்ள் எம்எல்ஏ நந்தக்குமாரிடம் மனு அளித்தனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூர் பேரூராட்சியில் புதியதாக கட்டப்பட உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்திற்கான பூமி பூஜை நேற்று காலை நடந்தது. இதில், எம்எல்ஏ நந்தகுமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அத்திக்குப்பம் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் சுற்று சுவர் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது, பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ நந்தகுமார் அந்த ஊராட்சியில் பணியாற்றும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது தொழிலாளர்கள் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும், வேலை தொடர்ச்சியாக வழங்க வேண்டும், 150 நாட்களாக உயர்த்தி வேலை வழங்க வேண்டும், வேலை வாய்ப்பு அட்டை அதிகமாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அப்போது, எம்எல்ஏ நந்தக்குமார் பிடிஒக்களை அழைத்து தொழிலாளர்கள் குறைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். பின்னர், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது, அங்கு மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார். இதில், கெங்கநல்லூர் ஊராட்சி தென்னஞ்சாலை கிராமத்தில் வசிக்கும் அருந்ததியர் காலனியை சேர்ந்த மக்கள் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு எம்எல்ஏவிடம் மனு அளித்தனர். அதற்கு தாசில்தாரிடம் பேசி பட்டா கிடைக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். அப்போது பிடிஒக்கள் கனகராஜ், சுதாகரன், ஒன்றிய பொறுப்பாளர்கள் பாபு, வெங்கடேசன், அவை தலைவர் மணிமாறன், துணை செயலாளர் பிரகாஷ் உடன் இருந்தனர். …

The post அணைக்கட்டு அடுத்த தென்னஞ்சாலை கிராமத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் எம்எல்ஏவிடம் மனு appeared first on Dinakaran.

Related Stories: