- ஆதர்வ
- பிரீத்தி முகுந்தன் ஆசாய்
- சென்னை
- ஆகாஷ் பாஸ்கரன்
- ஆதர்வ முரலி
- கயாடு லோஹர்
- மாலவிகா மோகனன்
- பஹாட் ஃபாசில்
- ப்ரீத்தி முகுந்தன்
சென்னை: அதர்வா முரளி, கயாடு லோஹர், மாளவிகா மோகனன், பஹத் பாசில் நடிப்பில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் எழுதி இயக்கியுள்ள ‘இதயம் முரளி’ என்ற படம் வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்த நிகழ்ச்சியில் பிரீத்தி முகுந்தன் பேசியதாவது: கடந்த இரண்டரை வருடங்களாக இப்படத்துடன் பயணித்துள்ளேன். இப்போது பிரிவதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.
ஆகாஷ் பாஸ்கரனுக்கு படம் தயாரிப்பதை விட, அதை இயக்குவதில்தான் அதிக விருப்பம் என்று சொன்னார்கள். அது அவரது கதையிலும், அதற்காக நேர்த்தியாக உழைத்ததிலும் தெரிந்தது. டைரக்ஷன் மீது அதிக ஆர்வம் இல்லை என்றால் இதெல்லாம் நடக்காது. என்னுடன் நடித்த பிரெண்ட்ஸ் கேங்கிற்கு நன்றி.
அவர்களால்தான் ஷூட்டிங் ஸ்பாட் ஜாலியாக இருந்தது. அதர்வா ஒரு ஜென்டில்மேன். அவருடன் எனது நட்பு நீண்ட நாள் தொடரும் என்று நம்புகிறேன். தமிழில் நான் முதலில் நடிக்க ஒப்பந்தமான படம் இது. இரண்டரை வருடங்கள் முடிந்து, மீண்டும் ஷூட்டிங்கிற்கு அழைக்க மாட்டார்களா என்று ஏங்கினேன். அவர்களை மீண்டும் பார்க்க முடியாது என்று நினைக்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
