திகில் மற்றும் திரில்லர் படமான ‘ராகினி 3’ என்ற படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கியது. இதில் தமன்னா நடிக்கிறார். படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளில், ‘டே – 01’ என்று எழுதப்பட்ட கிளாப் போர்டை பிடித்துள்ள போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் பகிர்ந்துள்ளார். இதில் ஆயுஷ் சர்மா, ஜூனைத் கான், நர்கீஸ் பக்ரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘ராகினி’ படத்தின் முந்தைய பாகங்களை விட மிகவும் வித்தியாசமாக, ‘ராகினி 3’ என்ற படத்தை ஷஷாங்கா கோஷ் எழுதி இயக்குகிறார்.
வழக்கமான சூப்பர் நேச்சுரல் ஹாரர் மற்றும் சஸ்பென்ஸ் அம்சங்களுடன் புதிய கதைக்களத்தில் படம் உருவாகிறது. கடந்த 2011ல் ‘ராகினி எம்.எம்.எஸ்’ என்ற படம் திரைக்கு வந்து ஹிட்டானது. அதை தொடர்ந்து 2014ல் சன்னி லியோன் நடிப்பில் ‘ராகினி எம்.எம்.எஸ் 2’ வெளியாகி, பாக்ஸ் ஆபீசில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ‘ராகினி 3’ படத்தில் தமன்னா நடிப்பதால், ரசிகர்களிடம் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

