×

சினிமாவில் நிறவெறியும், உருவகேலியும் அதிகரிப்பு! சமீரா ரெட்டி வேதனை

மும்பை: பாலிவுட்டை தொடர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்தவர், சமீரா ரெட்டி. திருமணம், குழந்தைகள் என்று இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த அவர், தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.

அவர் கூறியதாவது:
நான் அறிமுகமான படத்தில், எனது உண்மையான நிறத்தைவிட இரண்டு முதல் மூன்று மடங்கு வெளிறிய நிறமுடையவளாக, சாம்பல் நிற ஒப்பனை மூலம் என்னை காட்டினார்கள். அப்போது முகத்தின் நிறத்துடன் உடலின் நிறத்தை பொருத்துவதற்காக, உடல் முழுவதும் ஒப்பனை செய்ய வேண்டியிருந்தது. அழகுக்கான வரையறையை யார் வகுத்தது என்று தெரியவில்லை.

நிறைய பெண்களுக்கு அவர்களது சொந்த குடும்பத்தினரே உருவகேலி செய்யும் பிரச்னை இன்றும் இருக்கிறது. இதிலிருந்து மீண்டு வந்து என்னை நானே முழுமையாக ஏற்றுக்கொள்ள 20 ஆண்டுகளானது. எனது 40 வயதுகளில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டேன். எனது ஆரம்பகால வாழ்க்கையில், என்னைவிட உயரம் குறைந்த ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கும்போது, நான் கூனிக்குறுகி நடக்க வேண்டியிருந்தது. ஆடை வடிவமைப்பாளர்கள் கூட எனது உடலில் மாற்றங்களை செய்யச் சொல்லி வற்புறுத்தியதால், எப்போதும் திணிக்கப்பட்ட சில ஆடைகளையே அணிய வேண்டியிருந்தது.

Tags : Samira Reddy ,Mumbai ,Bollywood ,
× RELATED சீனியர் கிரிக்கெட் வீரர்களை இப்படியா நடத்துவது? அமீஷா பட்டேல் ஆவேசம்