×

போட்டோ ரியலிஸ்டிக் ஏஐ படம் அவிரா

முழுக்க, முழுக்க AI என்ற Artificial intelligence தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள படம், ‘அவிரா’. 70க்கும் மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கிய பிரபாகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். லைட் ஹவுஸ் பிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. முழுக்க, முழுக்க போட்டோ ரியலிஸ்டிக் ஏஐ தொழில்நுட்பம் மூலம் முழுநீள படத்தையும் தயாரித்து இருப்பது, இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை. கணேஷ், ஜெகதீஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.

படம் குறித்து பிரபாகரன் கூறுகையில், ‘அவிரா என்றால், பிரபஞ்சத்தின் பேரொளி என்று பொருள். புராணக்கதையை அடிப்படையாக வைத்து, அதில் கற்பனையை கலந்து, பான் இந்தியா படமாக உருவாக்கியுள்ளேன். போட்டோ ரியலிஸ்டிக் ஏஐ டெக்னாலஜி மூலம் கதாபாத்திரங்களை வடிவமைத்துள்ளேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தியேட்டரில் பார்த்து ரசித்து மகிழும் ஃபேண்டஸி படமான இதன் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது’ என்றார்.

Tags : Prabhakaran ,Light House Film Company ,India ,Ganesh ,Jagdish ,
× RELATED ஹீரோவுக்கு பூஜா ஹெக்டே சூட்டிய செல்லப்பெயர்