×

டாக்ஸிக் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை: கேவிஎன் புரொடக்சன்ஸின் பிரமாண்ட தயாரிப்பில் நடிகை கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் கன்னட நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள பான் வேர்ல்ட் படம் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் குரோன் அப்ஸ்’. இப்படத்தில் நயன்தாரா, ஹூமா குரேஷி, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், தாரா சுதாரியா என 5 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். மேலும், சுதேவ் நாயர், அக்‌ஷய் ஓபராய் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் யஷ் நடித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் இதன் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. கடந்த 4ம் தேதி வெளியாக இருந்த இப்படம் மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவி வந்த போர் சூழல் காரணமாக வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் ‘டாக்ஸிக்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி உலகம் முழுவதும் படம் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,KVN Productions ,Pan World ,Keetu Mohandas ,Yash ,Nayanthara ,Huma Qureshi ,Kiara Advani ,Rukmini Vasanth ,Tara Sutaria ,Sudev Nair ,Akshay Oberoi ,Ravi Basrur ,
× RELATED மனு விமர்சனம்…