×

ஏஞ்சலினா ஜூலியுடன் இணையும் பிரியங்கா

சென்னை: இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. தற்போது ஹாலிவுட் படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு மீண்டு இந்திய சினிமாவுக்கு திரும்பியுள்ள அவர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாரணாசி’ என்ற பான் வேர்ல்ட் படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது அடுத்த சர்வதேச புராஜெக்ட் குறித்த ஒரு அதிரடி தகவலை பகிர்ந்துள்ளார் பிரியங்கா சோப்ரா. அதன்படி, உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலியுடன் இணைந்து ஒரு புதிய திட்டத்தில் பணியாற்ற உள்ளார். இந்த கூட்டணி ஒரு முழு நீளத் திரைப்படமா அல்லது வெப் தொடரா என்பது பற்றி எந்த தகவலையும் அவர் தெரிவிக்காமல் ரகசியமாக வைத்துள்ளார்.

சர்வதேச பிராண்டின் விளம்பர படமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளாக உள்ள ஏஞ்சலினா ஜூலி, பிரியங்கா சோப்ரா ஒரே திரையில் ஒன்றாக தோன்றவிருப்பது, ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Priyanka ,Angelina Jolie ,Chennai ,Priyanka Chopra ,Hollywood ,Mahesh Babu ,SS Rajamouli ,
× RELATED மனு விமர்சனம்…