×

சென்னை கொளத்தூர் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது

சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியின் 14 வாக்குச் சாவடியில் பயன்படுத்தப்பட்ட வாக்கு பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியது.

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக முன்னாள் முதலமைச்சராக இருந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் தேர்தலுக்கு பயன் படுத்தப்பட்ட 14 வாக்கு எண்ணும் இயந்திரங்களை சரிபார்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்ததன் பெயரில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் சரிபார்ப்பு பணி தொடங்கியது.

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடத்தும் அலுவலராக இருந்த சாந்தி தலைமையில் இந்த வாக்கு பதிவு இயந்திரம் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் அனைத்து கட்சியின் பிரதிநிதிகளும் இந்த வாக்கு இயந்திரம் சரிபார்க்கும் நிலையத்திற்கு வந்திருக்கிறார்கள்.

தினசரி 2 இயந்திரங்கள் என்கின்ற விதம் 7 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னாக தமிழகத்தில் வேளூரில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்கு எண்ணும் இயந்திர சரிபார்க்கும் பணி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த சரி பார்க்கும் பணியானது மொத்தம் மூன்று கட்டமாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Election Commission ,Kolathur ,DMK ,M.K. Stalin ,Chief Minister of ,Tamil Nadu ,2026 assembly elections ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,05,240க்கு விற்பனை!!