×

பழனி முருகன் கோயிலின் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் 4 பேர் கைது

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலின் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளத்துரை, முருகதாஸ் உள்பட4 பேரை சிபிசிஐடி போலிசார் கைது செய்தனர்.பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் கடந்த ஜூலை 6ம் தேதி போலி ஆவணங்கள் மூலம் தனியாருக்கு ரூ.2 கோடிக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 15 ஆம் தேதி சிபிசிஐடி-க்கு மற்றம் செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி திண்டுக்கல் மற்றும் பழனியில் முகாம்மிட்டு 2 வாரங்களுக்கு மேலாக விசாரணை நடத்தி வந்தனர். வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் சார்பதிவாளர் மற்றும் கோவில் அலுவலர்கள் மற்றும் பலரிடம் விசாரணை செய்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை சிபிசிஐடி போலீசார் வழக்கு தொடர்பாக 4 பேரை கைது செய்து திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து அவர்களிடம் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் சிபிசிஐடி போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : Palani Murugan Temple ,Dindigul ,CBCID ,Vamathurai ,Murugadas ,Palani Dandayudapani Swamikal Foundation ,
× RELATED சென்னை–செய்யாறு இடையே 4 வழிச்சாலை டெண்டர் ரத்து செய்தது தவெக அரசு