கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கடந்த 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போன போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் விஜயகுமார் கல்வராயன் மலையின் 30 அடி பள்ளத்தில் இருந்து இன்று அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சிறுகள்ளூர் நீர்வீழ்ச்சிக்கு செல்லும்போது தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் கரியாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
