- பெண்கள் T20 உலக கோப்பை
- ஆஸி
- இங்கிலாந்து
- இறைவன்
- லண்டன்
- ஆஸ்திரேலியா
- 10 வது ஐசிசி பெண்கள் டி20 உலகக் கோப்பை
- பிரபுக்கள்
லண்டன்: 10வது ஐசிசி மகளிர் டி.20உலக கோப்பை தொடரில் இன்று இரவு 7 மணிக்கு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதி போட்டியில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா- இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது. நடப்பு தொடரில் இரு அணிகளும் ஒரு தோல்வியை கூட சந்திக்காத நிலையில் இன்று வெற்றியை தக்க வைத்து கோப்பையை தூக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஆஸி 7வது முறையாகவும், இங்கிலாந்து 2வது முறையாகவும் பட்டம் வெல்ல முட்டி மோதும். பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் சுமார் ரூ.20 கோடி பரிசு கிடைக்கும். ரன்னருக்கு ரூ.9.71 கோடி வழங்கப்படும். டி.20ல் இரு அணிகளும் இதற்கு முன் 45 முறை மோதியதில் ஆஸி. 23, இங்கிலாந்து 21ல் வென்றுள்ளன. ஒரு போட்டி ரத்தாகி உள்ளது. உலக கோப்பையில் 7 முறை மோதியதில் 5ல் ஆஸி,2 ல் இங்கி. வென்றுள்ளது. பைனலில் மோதிய 3 போட்டியிலும் ஆஸி. தான் வென்று உள்ளது.
